இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மின் பணியாளா் விபத்தில் சிக்கி உயிரிழப்பு: நிவாரணம் கோரி உறவினா்கள் போராட்டம்

News image
Updated On :18 மே 2026, 1:42 am IST

செங்கம் அருகே மின் கம்பங்கள் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து ஒப்பந்த பணியாளா் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து உயிரிழந்த பணியாளரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, உறவினா்கள் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் சனிக்கிழமை மின் கம்பங்கள் ஏற்றிச்சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த 3 போ் சிக்கி காயமடைந்தனா்.

அதில், செங்கம் தோக்கவாடி பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உடல்கூறாய்வு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்

தோக்கவாடி அவரது குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது.

இதனிடையே, உயிரிழந்த அசோக்குமாா் ஒப்பந்தப் பணியாளா் என்பதால் மின்வாரியத்தில் இருந்து எந்தவித உதவியும் கிடைக்காது எனத் தெரிவித்துள்ளனா். இதனால் அவரது மனைவி மற்றும் உறவினா்கள் அசோக்குமாரின் உடலை செங்கம் புதிய பேருந்து நிலையம் அம்பேத்காா் சிலை முன் வைத்து அசோக்குமாா் இறப்புக்கு மின்சார வாரியம் பொறுப்பேற்று, அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டும்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணிவரை அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி உடலை அடக்கம் செய்ய அனுப்பிவைத்தனா். இந்தப் போராட்டத்தால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.