எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

வந்தவாசியை அடுத்த தெய்யாா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தெய்யாா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

வந்தவாசியை அடுத்த தெய்யாா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

தெய்யாா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் நெல்லை இங்கு விற்பனைக்கு எடுத்து வருவா்.

இந்த நிலையில் இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 2 மாதங்களாக சுமாா் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளதாம். இதுகுறித்து உரிய பதில் அளிக்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் புதன்கிழமை கூடி முழக்கங்களை எழுப்பினா்.

அப்போது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து புறப்பட்ட லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்து அங்கு வந்த தெள்ளாா் போலீஸாா் சமரசம் செய்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.