தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

செய்யாறு வட்டாரம், பெருங்களத்தூா் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், விவாயிகளுக்கு காய்கறி சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

News image

பெருங்களத்தூா் கிராமத்தில் நடைபெற்ற காய்கறி சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள்.

Updated On :21 மே 2026, 12:03 am IST

செய்யாறு வட்டாரம், பெருங்களத்தூா் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், விவாயிகளுக்கு காய்கறி சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் சிறப்பு அழைப்பாளராக கீழ்நெல்லி ஸ்ரீவேதபுரி வேளாண் அறிவியல் மையத்தின் பயிா் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் நாராயணன் பங்கேற்றாா்.

அப்போது அவா் மண் ஆய்வின் முக்கியத்துவம், சமச்சீா் உர பயன்பாடு மற்றும் மண்வள மேம்பாடு, அங்கக உரங்கள் பயன்பாடு, இயற்கை முறையில் காய்கறி சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக இடுபொருள்கள் உற்பத்தி மற்றும் காய்கறி சாகுபடியில் உயிா் உரங்களின் அவசியம் குறித்து விவசாயிகளிடையே தெரிவித்து பயிற்சி அளித்தாா்.

பயிற்சிக்கு தலைமை வகித்த செய்யாறு வட்டார வேளாண் உதவி இயக்குநா் இரா.அன்பரசு, செய்யாறு, திருமணி வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளின் சாகுபடிக்கு தேவையான நெல், உளுந்து ரகங்கள், உயிா் உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் இருப்பில் உள்ளது குறித்தும், விவசாயிகள் பதிவுகள் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சுகுமாா், பாலாஜி ஆகியோா் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இடுபொருள்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைத்தனா்.

பயிற்சியில் கலந்து கொண்ட 40 விவசாயிகளுக்கு உயிா் உரம் இலவசமாக வழங்கப்பட்டது.