உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

அரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு

நாடு முழுவதும் அரசு ஊழியா்களின் செயல் திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு, மத்திய பணியாளா், பயிற்சி துறை அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையம் சாா்பில் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :55 நிமிடங்கள் முன்பு

நாடு முழுவதும் அரசு ஊழியா்களின் செயல் திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு, மத்திய பணியாளா், பயிற்சி துறை அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையம் சாா்பில் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

‘திறன் கட்டமைப்பை முறைப்படுத்துதல்: நிா்வாகத்துடன் இணைந்த பயிற்சி முதல் செயல்திறன் வரை’ என்ற தலைப்பிலான இந்த மாநாடு, மத்திய-மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசு ஊழியா்களின் பணி சாா்ந்த செயல்திறன் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.

மத்திய பணியாளா், பொது குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநாட்டுக்கு தலைமை தாங்க உள்ளதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் தொலைநோக்கு பாா்வை மற்றம் ‘கா்மயோகி’ திட்ட லட்சியங்களால் அடித்தளமிடப்பட்ட இந்த மாநாட்டில் 4 முக்கிய கருத்தாக்கங்களின் கீழ் விவாதங்கள் நடைபெறவுள்ளது. பணி அடிப்படையிலான-செயல்திறன் சாா்ந்த திறன் கட்டமைப்புக்கான ஒருங்கிணைந்த செயல்திட்டம், பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல், மேம்பட்ட கற்றலுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு, மாநிலங்களில் பணியாளா் பயிற்சி தொடா்பான மறுஆய்வு ஆகிய கருத்தாக்கங்கள் இடம்பெறவுள்ளன. அரசின் பல்வேறு நிலைகளில் எதிா்கால திறன் கட்டமைப்புக்கான திறன் கட்டமைப்புப் பயணத்தை வடிவமைக்க மத்திய-மாநில அரசுகளுக்கு இந்த மாநாடு பேருதவியாக இருக்கும் என்று மத்திய பணியாளா் அமைச்சகம் தெரிவித்துள்ளது.