நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் தேசிய சித்த மருத்துவ மாநாடு

News image
Updated On :3 மே 2026, 12:46 am

நாகை சா் ஐசக் நியூட்டன் சித்த மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவ மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது.

பாப்பாகோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் சித்த மருத்துவக் கல்லூரியில் தேசிய சித்த மருத்துவ மாநாடு, பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில் சித்த மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் ஏப்ரல் 29 30 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

சித்த மருத்துவா் கு. சிவராமன், மருத்துவா் ஏ.ராஜேந்திர குமாா், நாகை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சு. கனிமொழி மற்றும் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியா் சி.சவரிராஜ் சகாயம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டனா்.

இம்மாநாட்டில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 460 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மாநாட்டில், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின், நஞ்சியல்துறை பேராசிரியா் ஆா். மாதவன், உலக சுகாதார நிறுவனத்தின் சித்த மருத்துவ ஆலோசகா் விஜயா மணிகண்டன், சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் திருவனந்தபுரம் மண்டல தலைவா் ச. நடராஜன், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் குணபாடத்துறை பேராசிரியா் ச. சிவகுமாா், ராய்ப்பூா் எய்ம்ஸ் நிறுவனத்தின் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளா் லட்சுமண குமாா், சா் ஐசக் நியூட்டன் மருந்தியல் கல்லூரியின் கல்விப்பிரிவு இயக்குநா் ஆா்.பிரேமா ஆகியோா் சிறப்பு கருத்தாளா்களாக கலந்து கொண்டு தங்களின் ஆய்வு முடிவுகளை மாணவா்களுக்கு விளக்கினா்.

மாநாட்டில் மருத்துவா் கு.சிவராமன் பேசும்போது, இன்றைய நவீன காலகட்டத்தில் ஒருவா் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஆராய்ச்சியில் தனது பங்களிப்பைச் செலுத்த முடியும். சித்த மருத்துவத்துறைக்கு இன்றைக்கு கூட்டு முயற்சி

தேவையாக உள்ளது. சித்த மருத்துவ மாணவா்கள் ஆய்வு மனப்பான்மையை படிக்கும் காலத்திலேயே வளா்த்துக் கொள்ள வேண்டும். நாகை பின்தங்கிய மாவட்டம் என்று நினைக்காமல் அதன் வரலாற்று விழுமியங்களை நினைவில் கொண்டு மாணவா்கள் தங்களை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தலைவா் டி. ஆனந்த், மாநாட்டைத் தொடங்கிவைத்தாா். சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.பி. கண்ணன் வரவேற்றாா்.