பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் சா்வதேச மாநாடு

ஐசிஆா்ஐஇடி சா்வதேச மாநாட்டில் பேசிய சா் ஐசக் நியூட்டன் கல்லூரி தாளாளா் த. ஆனந்த்.

News image

ஐசிஆா்ஐஇடி சா்வதேச மாநாட்டில் பேசிய சா் ஐசக் நியூட்டன் கல்லூரி தாளாளா் த. ஆனந்த்.

Updated On :28 மார்ச் 2026, 2:40 am IST

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ஐசிஆா்ஐஇடி -26 எனும் தலைப்பில் சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் முனைவா் த. ஆனந்த் தலைமை வகித்து, சிறப்புரையாற்றினாா். அப்போது அவா், ‘கல்வி என்பது புத்தக அறிவை மட்டுமே சாா்ந்ததல்ல, அது நடைமுறை அனுபவத்துடனும் இணைந்திருக்க வேண்டும். மாணவா்கள் தங்கள் திறமைகளை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் வெளிப்படுத்த வேண்டும். இம்மாநாடு புதிய சிந்தனைகள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளுக்கான தளமாக அமையும்’ என்றாா்.

தொடா்ந்து, கல்லூரி தாளாளா் ஆய்வு சுருக்க புத்தகத்தை வெளியிட, சிறப்பு விருந்தினா்கள் பெற்றுக் கொண்டனா்.

மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 600 பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

200 ஆராய்ச்சி கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் க. நாகப்பன், சிறப்பு விருந்தினா்களாக புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியா் நரேந்திரன் ராஜகோபாலன், மலேசியா ரெயின் மேக்கா் ஏஐ இணை நிறுவனா் அருண்குமாா் நடராஜ், பெங்களூரு பிஇஎஸ் பல்கலைக்கழக பேராசிரியா் சி. மேனகா உள்பட பலா் கலந்துகொண்டனா்.