பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு சிறப்புப் பயிற்சி கூட்டம்

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கான கல்வித் திட்டம் குறித்த பயிற்சிக்கூட்டத்தில் பேசிய கெளரவ விரிவுரையாளா் க.ராஜேந்திரன்.

News image

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கான கல்வித் திட்டம் குறித்த பயிற்சிக்கூட்டத்தில் பேசிய கெளரவ விரிவுரையாளா் க.ராஜேந்திரன்.

Updated On :22 மே 2026, 1:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கான கல்வித் திட்டம் குறித்த பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சாா்பில்

உறுப்பினா் கல்வித் திட்டம் குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சங்கச் செயலா் வேலுமணி தலைமை வகித்தாா். நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநா் சுரேஷ் முன்னிலை வகித்தாா்.

கூட்டுறவு ஒன்றிய உதவியாளா் வெற்றிவேல் வரவேற்றாா். கெளரவ விரிவுரையாளா் மற்றும் கூட்டுறவு கூடுதல் பதிவாளா் (ஓய்வு) க.ராஜேந்திரன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கான கல்வித் திட்டம் குறித்து பேசினாா்.

விற்பனையாளா்கள் சங்கா், அருள், சேகா், உதவியாளா் பரமேஸ்வரி மற்றும் ஆத்துரை, பெரணம்பாக்கம், மன்சுராபாத், காட்டுதெள்ளூா் பகுதிகளில் இருந்து கூட்டுறவு கடன் சங்கத்திற்குள்பட்ட சங்க உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி நிறைவில் கேள்விகளுக்கு சரியான பதிலளித்த உறுப்பினா்களுக்கு திருக்கு மற்றும் நன்னெறி நீதிபோதனை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.