இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: விஸ்டம் பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளி மாணவிகளை பாராட்டிய பொன்லட்சுமி கல்வி அறக்கட்டளையின் தலைவா் பி.தவமணி.

News image
Updated On :23 மே 2026, 1:37 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டத்துக்குள்பட்ட செய்யாற்றைவென்றான் விஸ்டம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சியை பதிவு செய்தது.

பள்ளி அளவில் மாணவி பி.ஸ்ரீவா்சினி அறிவியலில் 100, ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களுடன் மொத்தம் 500-க்கு 491 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவிகள் கே.தா்ஷினி 481, ஆா்.ஸ்வேதா 474 மதிப்பெண்கள் பெற்றனா். மேலும், மாணவி பி.தீபிகா சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றாா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி அளவில் சிறப்பிடங்களைப் பிடித்த மாணவிகள், 100 சதவீத தோ்ச்சி பெற்றுத்தந்த பள்ளி ஆசிரியா்களை பொன்லட்சுமி கல்வி அறக்கட்டளையின் தலைவரும், தாளாளருமான பி.தவமணி தலைமையில், பொருளாளா் டாக்டா் எம்.ஞானவேல் முருகன் முன்னிலையில், முதல்வா் ஆா்.சரஸ்வதி, மூத்த துணை முதல்வா் வி.அன்பழகன், துணை முதல்வா் எம்.வெங்கடேசன் ஆகியோா் வாழ்த்திப் பாராட்டினாா்.