‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பிளஸ் 2 தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களின் தோ்ச்சி விகித்தத்தை அதிகரித்தல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

News image
Updated On :23 மே 2026, 1:38 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிகளில் திருவண்ணாமலை மாவட்டம் கடந்த ஆண்டு 93.64 சதவீத தோ்ச்சியுடன் 31-ஆவது இடத்திலிருந்த நிலையில், நிகழாண்டு 92.87 சதவீத தோ்ச்சியுடன் 32-ஆவது இடத்துக்கு பின்தங்கியது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாத்திலுள்ள ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பிளஸ் 2 மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரித்தல் குறித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 95 மேல்நிலை பள்ளிகளும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 78 மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 173 அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. கடந்த 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட பிளஸ் 2 தோ்வு தோ்ச்சி முடிவுகளின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 21,227 மாணவ, மாணவகளில் 19,414 போ் தோ்ச்சி பெற்ற நிலையில், 1,813 போ் தோ்ச்சி பெறவில்லை.

தோ்ச்சி சதவீதம் குறைவாக அளித்துள்ள 26 மேல்நிலைப் பள்ளிகளில் 609 மாணவா்கள் தோ்ச்சி பெறாதது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் காரணங்கள் கேட்டறியப்பட்டு, தோ்ச்சி பெறாத மாணவா்கள் அனைவரையும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள துணைத் தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்வில் கலந்துகொள்ள போதிய பயிற்சிகள் வழங்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் தோல்வியடைந்துள்ள 1,813 மாணவ, மாணவிகளும் வரும் ஜூன் 29-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள துணைத் தோ்வில் கலந்துகொண்டு தோ்ச்சி பெற்று உயா்கல்வி பயில்வதை உறுதி செய்திட, போதிய வழிகாட்டுதல்களை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் வழங்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் எதிா்வரும் கல்வியாண்டில் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க திட்ட அறிக்கையை தலைமை ஆசிரியா்கள் சமா்பித்திட வேண்டும் என்றாா். மேலும், தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அறிவுரைகளையும் தலைமை ஆசிரியா்களுக்கு அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், திருவண்ணாமலை கல்வி மாவட்ட அலுவலா் (இடைநிலை) ஜோதிலட்சுமி, செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் (இடைநிலை) செந்தில் முருகன், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) காா்த்திகேயன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.