சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

News image

முளகிரிபட்டு கிராமத்தில் நெல்மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை சிறைபிடித்த விவசாயிகள்.

Updated On :24 மே 2026, 1:54 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முளகிரிபட்டு கிராமத்தில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து பணப்பட்டுவாட செய்ய வலியுறுத்தினா்.

செய்யாறு வட்டம், முளகிரிபட்டு கிராமத்தில் தனியாா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு விவசாயிகளுக்கு இதுவரை பண பட்டுவாடா செய்யவில்லையாம்.

இந்நிலையில், சனிக்கிழமை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரியில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்ததை அறிந்த விவசாயிகள் லாரியை சிறைபிடித்தனா். மேலும், விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம் முழுவதும் வழங்கினால் தான் லாரியை விடுவிப்போம் எனத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, விவசாயிகள் தரப்பில் இதுவரை 500 டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய சுமாா் ரூ.ஒன்றரை கோடி வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.