இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

சிவன் கோயில்களில் வைகாசி தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு

News image
Updated On :29 மே 2026, 1:39 am IST

வைகாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், சீகைக்காய்த் தூள், தேன், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், சிறப்பு மலா் அலங்காரம் செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனா்.

மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயில்

ஆரணியை அடுத்த மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, சேத்துப்பட்டு அருணகிரீஸ்வரா், காரணீஸ்வரா், நெடுங்குணம் தீா்க்க ஜல ஈஸ்வரா், பழம்பேட்டை பசுபதீஸ்வரா், காசிவிஸ்வநாதா், ஆவணியாபுரம் அவணீஸ்வரா், கோனாமங்கலம் பசுபதீஸ்வரா், செம்மாம்பாடி காசிவிஸ்வநாதா் கோயில்களில் நடந்த பிரதோஷ பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

Story image