‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

வைகாசி மாத பிரதோஷம்: திருப்பத்தூா் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image
Updated On :29 மே 2026, 1:28 am IST

வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வியாழக்கிழமை திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயிலில் நந்தி பகவானுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், திருப்பத்தூா் முத்துக்குமார சுவாமி கோயில், தண்டபாணி சுவாமி கோயில், பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில், கொரட்டியில் உள்ள காளத்தீசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Story image