வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

News image
Updated On :29 மே 2026, 1:42 am IST

செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அன்று இரவு அன்ன வாகனத்திலும், மறுநாள் இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

மூன்றாம் நாளான வியாழக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முன்னதாக காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

பின்னா், சுவாமிக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு விழாக்குழுவினா், உபயதாரா்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.