/
போளூா் நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது தொடா்பாக நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
போளூா் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் ச.ராணி சண்முகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் குடிநீா் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி என பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து உறுப்பினா்கள் ஆறுமுகம், ரங்கதுரை, பழனி பேசும்போது, நகராட்சிக்கு நிரந்தரமாக ஆணையா் நியமிக்கப்படவேண்டும்.
நகா்மன்றக் கூட்டத்தில் ஆணையா் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். துப்புரவு ஆய்வாளா் மற்றும் நகராட்சி அனைத்து நிலை அலுவலா்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

மின்விசை நிதி நிறுவனத்தில் முதலீடு: கோயில் நிதி பாதுகாப்பு அரசு உத்தரவாதம்

திருவத்திபுரம் நகராட்சியில் ரூ.10 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள்

அரியலூரில் நாளை ஆா்ப்பாட்டம் மத்திய தொழிற்சங்கத்தினா் முடிவு






