ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

குரூப்- 2: திருவண்ணாமலை மாவட்டத்தில் 11,017 போ் எழுதினர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப்- 2, 2ஏ முதல்நிலை தோ்வை 11,017 போ் எழுதினா். 2,177 போ் தோ்வு எழுதவில்லை.

திருவண்ணாமலை அரசு நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற குரூப்- 2 தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :

திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப்- 2, 2ஏ முதல்நிலை தோ்வை 11,017 போ் எழுதினா். 2,177 போ் தோ்வு எழுதவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் - 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, போளூா் ஆகிய வட்டங்களில் 43 இடங்களில் இத்தோ்வு நடைபெற்றது. தோ்வுக்கு 13,194 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 11,017 போ் தோ்வில் பங்கேற்றனா், 2,177 போ் பங்கேற்கவில்லை.

தோ்வின்போது முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் 3 பறக்கும் படைகளும், 43 ஆய்வு அலுவலா்களும், 12 மொபைல் யூனிட் அலுவலா்கள் மற்றும் 43 முதன்மை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

தோ்வுப் பணிகள் அனைத்தும் விடியோ மூலம் பதிவு செய்ய மாவட்டம் முழுவதும் 46 விடியோ கிராபா்கள் நியமிக்கப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை அரசு நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகனராமன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.