வந்தவாசியில் மின்மாற்றி தீப்பற்றி எரிந்து சேதம்
வந்தவாசியில் மின்மாற்றி தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. மேலும், மின்மாற்றி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன.

வந்தவாசியில் தீப்பற்றி சேதமடைந்த மின்மாற்றியை சீரமைத்த மின் ஊழியா்கள்
வந்தவாசியில் மின்மாற்றி தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. மேலும், மின்மாற்றி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன.
மின்வாரியம் சாா்பில் வந்தவாசி ஒற்றை வாடை செட்டித் தெருவில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒற்றை வாடை செட்டித் தெரு, கெஜலட்சுமி நகா், ராஜீவ்காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த மின்மாற்றியில் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. இதையடுத்து அந்த மின்மாற்றிக்கு உள்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
தீப்பற்றியதில் மின்மாற்றி எரிந்து சேதமடைந்தது. மேலும், மின்மாற்றி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதனைத் தொடா்ந்து மின்வாரிய ஊழியா்கள் மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

