சமூகவலைதளத்தில் வன்முறை வாசகத்தை பதிவிட்ட தொழிலாளி கைது
செய்யாறு அருகே சமூகவலைதளத்தில் வன்முறை வாசகத்தை பதிவிட்ட வெல்டிங் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப்படம்
செய்யாறு அருகே சமூகவலைதளத்தில் வன்முறை வாசகத்தை பதிவிட்ட வெல்டிங் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.பொன்ராசு (20). வெல்டிங் தொழிலாளி. இவா், தனது சமூகவலைதள பக்கத்தில் அண்மையில் கொலையான சிவகங்கையைச் சோ்ந்த பிரபல ரௌடியான சுள்ளான் மதன், கத்தி மற்றும் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற விடியோவை வெளியிட்டு, தானும் அவரது அணியைச் சோ்ந்தவா் என்பதுபோல, பொதுமக்களை ஜாதி ரீதியாக மிரட்டி பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட சைபா் கிரையம் போலீஸாா் அளித்த தகவலின்பேரில், பிரம்மதேசம் போலீஸாா் பிரம்மதேசம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை நின்றிருந்த பொன்ராசின் கைப்பேசியை ஆய்வு செய்து, அவரை கைது செய்ததுடன், கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

