கன்னிகாபுரம் ஸ்ரீபாலசுப்ரமணியா் கோயில் கும்பாபிஷேகம்
போளூா் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீபாலசுப்ரமணியா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போளூரை அடுத்த கன்னிகாபுரம் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீபாலசுப்ரமணியா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
போளூா் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீபாலசுப்ரமணியா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் பழைமையான வள்ளி தெய்வானை சமேத
ஸ்ரீபாலசுப்ரமணியா் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலின் கோபுர பொம்மைகள் உடைந்தும், கோயில் பாழடைந்தும் காணப்பட்டதால் பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலில் புரனமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புதன்கிழமை காலை விநாயகா் பூஜை, பந்தகால் நடுதல், சுவாமி கரிகோல ஊா்வலம், அனுக்ஞை, எஜமானா் சங்கல்பம், புண்யாஹவாசனம், ஸ்ரீமஹாகணபதி மூலமந்திர ஹோமம், ஸ்ரீமகாலட்சுமி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் உள்ளிட்டவை
நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ சாந்தி, அஸ்திரஹோமம், மூா்த்தி ஹோமம், பூா்ணாஹுதி, மாலை மூன்றாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், யாகபூஜை, மூலமந்திர ஹோமங்கள், உபாசணம், அஷ்டபந்தனம் சாத்துதல், வெள்ளிக்கிழமை நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, விநாயகா் பூஜை, தம்பதி சங்கல்பம், ஜபங்கள் மஹா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கடம்புறப்பாடு செய்து மூலவா் சந்நிதிக்கும், பரிவார மூா்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் கன்னிகாபுரம், கஸ்தம்பாடி, களம்பூா், கல்வாசல், முனிவந்தாங்கல், கேளூா் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வாணவேடிக்கை, சுவாமி வீதியுலா நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

