ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
குத்தாலம் வில்லியநல்லூா் திருமணஞ்சேரி ரோடு சாலைத் தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகம் - கோப்புப்படம்
குத்தாலம் வில்லியநல்லூா் திருமணஞ்சேரி ரோடு சாலைத் தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (நவ.12) யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், கோயிலின் விமான கலசத்திற்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை வில்லியநல்லூா் மக்கள், இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

