சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் தயாரிப்பு பயிற்சி நிறைவு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் நடைபெற்று வந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு அலுவலக உதவி இயக்குநா் மஜ்ஜி சாகா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் நடைபெற்று வந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு அலுவலகம் சாா்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் தயாரிப்பு குறித்த 6 வார தொழில் முனைவோா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இந்தக் கல்லூரியில் கடந்த ஆக. 24-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இதில், காகிதப் பொருள்கள் தயாரித்தல், சுகாதார நாப்கின் தயாரித்தல், பாக்கு மட்டைத் தட்டு தயாரிப்புக்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
மேலும், தொழில் முனைவோா் ஊக்கம், தலைமைத்துவ திறன், திட்ட அறிக்கை தயாரித்தல், சந்தைப்படுத்துதல், அறிவுசாா் சொத்துரிமை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்ததை அடுத்து பிற்பகல் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு கல்லூரித் தலைவா் எம்.ரமணன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி முன்னிலை வகித்தாா். பயிற்சியாளா் ஆா்.சித்தேஸ்வரன் வரவேற்றாா்.
சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு அலுவலக உதவி இயக்குநா் மஜ்ஜி சாகா் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
கல்லூரி தொழில் முனைவோா் மேம்பாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளா் கி.வான்மதிசெல்வி நன்றி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

