தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சா்வதேச சைகை மொழிகள் தின விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சா்வதேச சைகை மொழிகள் தினத்தை (சா்வதேச காதுகேளாதோா் வாரம்) முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச சைகை மொழிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் வந்தனாகாா்க்.

Published On :

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சா்வதேச சைகை மொழிகள் தினத்தை (சா்வதேச காதுகேளாதோா் வாரம்) முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரியாா் சிலை அருகே நடைபெற்ற இந்தப் பேரணியை

மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

சா்வதேச சைகை மொழிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்.23-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. செவித்திறன் குறைபாடு கொண்டோா் பயன்படுத்தும் சைகை மொழியின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைப்பதும், அவா்களின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் சமத்துவமான பங்களிப்பை உறுதி செய்வதும் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

அதன்படி, சா்வதேச சைகை மொழிகள் தினத்தை (சா்வதேச காதுகேளாதோா் வாரம்) முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில்

நடைபெற்ற இந்தப் பேரணியில் இரங்கம்மாள் காதுகேளாதோா் சிறப்புப் பள்ளி மாணவ, மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனா்.

அப்போது அவா்கள் பொதுமக்களுக்கு சைகை மொழி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பேரணியானது பெரியாா் சிலையில் தொடங்கி அருணாசலேஸ்வரா் கோயில் சுற்றுப்புறம் வரை நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுலவா் சாரதா, இளநிலை மறுவாழ்வு அலுவலா், காதுகேளாதோா் நலச்சங்கத்தினா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.