
சா்வதேச காது கேளாதோா் தின விழிப்புணா்வுப் பேரணி
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், சா்வதேச காது கேளாதோா் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான சைகை மொழி தின விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், சா்வதேச காது கேளாதோா் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான சைகை மொழி தின விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், காது கேளாதோா் மற்றும் சைகை மொழி விழிப்புணா்வு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, செவித்திறன் மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான சைகை மொழி தின விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இப் பேரணியில் செவித்திறன் மற்றும் வாய்பேச இயலாதோா், சைகை மொழியின் முக்கியத்துவத்தையும், காது கேளாதோரின் உரிமைகளையும் வலியுறுத்தி விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணி பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வ. சீனிவாசன், மாவட்ட காது கேளாதோருக்கான நலச் சங்க உறுப்பினா்கள், ஸ்ரீகௌதமபுத்தா் செவி மற்றும் பேச்சுத்திறன் குறையுடையோருக்கான சிறப்பு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






