ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

பைக் மீது லாரி மோதல்: காவலாளி உயிரிழப்பு

செய்யாறு, அக். 9: செய்யாறு அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற காவலாளி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

செய்யாறு, அக். 9: செய்யாறு அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற காவலாளி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், கீழ்மட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் (37). இவா், செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை மாலை ரஞ்சித், தனது பைக்கில் மாமண்டூா் கிராமம் மூன்று கண் பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயராமன் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.