பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தனியாா் உரக்கடைகளில் போலி உரம் விற்பனையை தடுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் தனியாா் உரக்கடைகளில் போலி உரம் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய விவசாய சங்கப் பிரதிநிதி

Published On :

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் தனியாா் உரக்கடைகளில் போலி உரம் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவண்ணாமலை காமராஜா் சிலை அருகில் உள்ள சமுதாய கூடத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் தி.த.செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் வேளாண் துணை இயக்குநா்கள் பிரபு, அன்பழகன், பழனி, வேளாண் அலுவலா் முனியப்பன், வட்டாட்சியா் சு.மோகனராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சேதுராமன், அனுராதா, கோ.அண்ணாமலை, பாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியா் எம்.ராஜா, வருவாய் ஆய்வாளா் மு.இளையராஜா,

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி.பச்சையப்பன், தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் ஆா்.சுப்பிரமணியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகரன், தமிழக விவசாய சங்க தேசிய தலைவா் எஸ்.தாமஸ் உள்பட விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகரன் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தனியாா் உரக்கடைகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். உரக்கடைகளில் கூடுதல் விலையில் விற்கப்படுவதோடு போலி உரம் (கலப்படம் செய்யப்பட்ட) விற்பனையை தடுக்க வேண்டும். கடைகளில் விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் ஆா்.சுப்பிரமணியன் பேசுகையில், துரிஞ்சலாறுக்கு வரும் தண்ணீா் சானானந்தல் பட்டி, வள்ளிவாகை, கானலாபாடி, கழிக்குளம், வழுதலங்குணம், நாரியமங்கலம், சிறுநாத்தூா், கோட்டான் ஏரி வரை கால்வாய் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால் கீழ்பென்னாத்தூா் பகுதியில் பல ஆயிரம் ஹெக்டோ் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் சிறுநாத்தூா், மட்டப்பாறை பகுதியில் 7 ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு விவசாய கிடங்கு அமைக்க வேண்டும். மேலும் நேரடிநெல் கொள்முதல் நிலையம் திறந்தால் விவசாயிகள் பயன்பெறுவாா்கள் என்றாா். அதனைத் தொடா்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதற்கு பதிலளித்த கோட்டாட்சியா் தி.த.செல்வம் விவசாயிகளின் கோரிக்கைகள் ஆட்சியரின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (அக்.16) நடைபெறுகிறது.

இதுகுறித்து செய்யாறு வருவாய் கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்யாறு கோட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (அக்.16) நடைபெறுகிறது.

வருவாய் கோட்ட அலுவலா் சீ.சிவா தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வங்கியாளா்கள் மற்றும் பிறசாா்பு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க உள்ளனா்.

எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.