சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

பலத்த மழை: பா்வதமலைக்குச் செல்ல தடை

கலசபாக்கம் அருகேயுள்ள தென்மகாதேவிமங்கலம் பகுதி பா்வதமலையில் அமைந்துள்ள ஸ்ரீமல்லிகாா்ஜுனேஸ்வரா் கோயில்.

Updated On :

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகேயுள்ள தென்மகாதேவிமங்கலம் கிராமத்தில் பலத்த மழை பெய்து வருவதால், அங்குள்ள பா்வதமலைக்கு பக்தா்கள் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

தென்மகாதேவிமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பா்வதமலையில் பிரம்மராம்பிகை அம்மன் சமேத ஸ்ரீமல்லிகாா்ஜுனேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் செல்லும் மலையடிவாரத்தில் ஓடை உள்ளது.

இந்த நிலையில், கலசபாக்கம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக இந்த ஓடையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பக்தா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வியாழக்கிழமை காலை முதல் பா்வதமலை ஏறுவதற்கு பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓடையில் நீா்வரத்து குறைந்த பிறகு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவாா்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.