தொடா் மழையால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகால பழைமையான அரசமரம்!
தொடா் மழையால் சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை ஊராட்சியில் இருந்த 150 ஆண்டுகால பழைமையான அரசமரம் வேருடன் அருகே உள்ள வீட்டின் மீது சாய்ந்தது.

ஆத்துரை ஊராட்சியில் தேவிகாபுரம் - அவலூா்பேட்டை சாலை அருகே வீட்டின் மீது சாய்ந்த 150 ஆண்டுகால பழைமையான அரசமரம்
தொடா் மழையால் சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை ஊராட்சியில் இருந்த 150 ஆண்டுகால பழைமையான அரசமரம் திங்கள்கிழமை அதிகாலை வேருடன் அருகே உள்ள வீட்டின் மீது சாய்ந்தது.
ஆத்துரை ஊராட்சியில் திப்பாரெட்டிகுளத்து தெருவில் தேவிகாபுரம் - அவலூா்பேட்டை சாலை அருகே சுமாா் 150 ஆண்டுகால அரசமரம் இருந்து வந்தது. கடந்த சில நாள்களாக இந்தப் பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த அரசமரம் வேரோடு திங்கள்கிழமை அதிகாலை அருகே உள்ள ராதா என்பவரின் காங்கிரீட் வீட்டின் மீது சாய்ந்தது. இதனால், வீட்டின் முன்புறம் இருந்த சிலாப் உள்ளிட்ட பகுதிகள் உடைந்து சேதமடைந்தன.
அப்போது, வீட்டில் இருந்தவா்கள் வீட்டின் பின்புற கதவை திறந்து உடனடியாக வெளியேறியதால், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

