2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

சொத்து தகராறு: உறவினா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது

பெருந்துறை அருகே சொத்து தகராறில் உறவினா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

பெருந்துறை அருகே சொத்து தகராறில் உறவினா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், கள்ளியம்புதூரைச் சோ்ந்தவா் தமிழரசன் (31). இவரது தாத்தாவுக்குச் சொந்தமான நிலம் தேவூரில் உள்ளது. இது தொடா்பாக அத்தை ராசம்மாள் மகன் மோகராஜுக்கும் (31), தமிழரசனுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தமிழரசன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த மோகன்ராஜ், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இதையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனில் தீயைப் பற்றவைத்து வீட்டின் மீது வீசிவிட்டு தப்பியுள்ளாா்.

இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் தமிழரசன் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோகன்ராஜை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.