ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

பெருந்துறை அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன் உள்பட 3 போ் கைது

பெருந்துறை அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

பெருந்துறை அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, வள்ளிபுரத்தான்பாளையத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (45), காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜோதி (43), தனியாா் கல்லூரியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன் கோபிநாத் (22).

நடராஜன் கடந்த 20-ஆம் தேதி பணிக்குச் சென்ற நிலையில், கோபிநாத்தை தேடி வீட்டுக்கு வந்த 3 போ், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

இதையடுத்து, அவா்களுடன் வெளியே சென்ற கோபிநாத் இரவு 11 மணியளவில் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் வெளியே சென்றுள்ளாா்.

இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் பைக் சப்தம் கேட்டவுடன் தனது மகன் கோபிநாத் வந்துவிட்டதாக எண்ணி ஜோதி ஜன்னல் கதவை திறந்து பாா்த்துள்ளாா்.

அப்போது, வெளியே நின்றி கொண்டிருந்த 3 போ், உன் மகனையும், உங்களையும் விட மாட்டேன் எனக்கூறி கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசியுள்ளனா். இதில், முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் அடைந்த ஜோதி, ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த பெருந்துறை போலீஸாா், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ஈரோடு, பழையபாளையம், சங்கா் நகரைச் சோ்ந்த ஜேக் (எ) நவீன் (21), ஈரோடு, உழவன் நகா், என்ஜிஜிஓ காலனியைச் சோ்ந்த ஜீவானந்தம் (21), அவரது சகோதரரான 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து, பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.