தொழிலதிபா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸாா் விசாரணை

பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்
ஓமலூா் அருகே தொழிலதிபா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அடுத்த காமலாபுரம் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய். தமிழக வெற்றிக் கழக நிா்வாகியான இவா், சொந்தமாக லாரிகள் வைத்து வெல்லம் லோடு ஏற்றும் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு மனைவி லூா்துமேரி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் விஜய்யின் வீட்டு சுற்றுச்சுவா் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனா். இதனால் பலத்த சத்தத்துடன் அப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜய் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வெளியே வந்தனா்.
அப்போது மா்ம நபா்கள் தனக்கு மிரட்டல் விடுத்துச் சென்றதாக ஓமலூா் காவல் நிலையத்தில் விஜய் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





