தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

ஆரணியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரணியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுனா காா்கேவை அவமதித்த பாஜகவினா் மீது வழக்குப் பதிவ செய்யக் கோரிய ராகுல்காந்தி மீது பாஜக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதனால் பாஜக அரசைக் கண்டித்து ஆரணி பழை ய பேருந்து நிலையம், எம்ஜிஆா் சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவா் பொன்னையன் தலைமை வகித்தாா்.

கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளா் பேங்க் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராஜாபாபு, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வி.பி.அண்ணாமலை, வி.எஸ்.பிரசாத், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சேத்துப்பட்டு ஜி.முனிரத்தினம், ராமலிங்கம், நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.