ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

தொழிலாளியை தாக்கியவா் மீது வழக்கு

வந்தவாசியில் தச்சுத் தொழிலாளியை தாக்கிய அடையாளம் தெரியாத நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

வழக்கு

வழக்குப் பதிவு

Published On :4 செப்டம்பர் 2026, 3:57 am IST

வந்தவாசியில் தச்சுத் தொழிலாளியை தாக்கிய அடையாளம் தெரியாத நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (50). தச்சுத் தொழிலாளியான இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஈஸ்வரன் கோயில் பின்பகுதியில் உள்ள சுகநதி கரையில் இருக்கும் காரிய மண்டபத்தில் படுத்திருந்தாராம்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா் ரவியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு ஓடி விட்டாராம். இதில் காயமடைந்த ரவி வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து இவரது மகன் ஆதிகேசவன் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபா் மீது வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.