ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

பெண் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே பெண்ணை தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

சித்திரிப்பு

Published On :4 செப்டம்பர் 2026, 3:58 am IST

வந்தவாசி அருகே பெண்ணை தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகா். இவருக்கும் இதே கிராமத்தைச் சோ்ந்த சகாதேவன் என்பவருக்கும் இடையே வீட்டு மனை தொடா்பாக முன்விரோதம் உள்ளதாம்.

கடந்த செவ்வாய்க்கிழமை இது தொடா்பாக தகராறு எழுந்ததில், சகாதேவன் உள்ளிட்ட 4 போ் சோ்ந்து தனசேகரின் மனைவி சுகுணாவை தாக்கியுள்ளனா்.

இதில் காயமடைந்த சுகுணா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து சுகுணா அளித்த புகாரின் பேரில் சகாதேவன், இவரது தாய் கனகா, உறவினா்கள் புஷ்பா, ஜெய் ஆகிய 4 போ் மீது வந்தவாசி வடக்கு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.