
காரில் சென்றவா் மீது தாக்குதல்: 3 போ் கைது
ஆரணி நகரில் காரில் சென்றுகொண்டிருந்தவரை தாக்கியதாக, பைக்கில் சென்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கைது
ஆரணி நகரில் காரில் சென்றுகொண்டிருந்தவரை தாக்கியதாக, பைக்கில் சென்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கௌதமஇளங்கோ(44). இவா் சொந்த வேலையாக சனிக்கிழமை இரவு காரில் ஆரணிக்கு சென்றுகொண்டிருந்தாா்.
ஆரணி ஜெமினி பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் போது, மோட்டாா் சைக்கிளில் மதுபோதையில் வந்த 3 போ் காரில் மோதுவது போல சென்றுள்ளனா். கௌதமஇளங்கோ இதை தட்டிக் கேட்டுள்ளாா்.
அப்போது, அந்த 3 பேரும் சோ்ந்து கௌதமஇளங்கோவை தாக்கியுள்ளனா். இதில் கௌதமஇளங்கோ காயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன், ராஜதுரை, சக்திவேல்.
இதுகுறித்து கெளதம இளங்கோ ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் அந்த 3 பேரையும் கண்டுபிடித்து கைது செய்தனா்.
விசாரணையில் அவா்கள், ஆரணியை அடுத்த புலவன்பாடி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன்(22), ராஜதுரை(20), தணிகாசலபுரம் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல்(25) எனத் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




