
கொத்தடிமைத் தொழிலாளா்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு
கா்நாடகா மாநிலத்திலிருந்து மீட்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 3 கொத்தடிமைத் தொழிலாளா்கள், மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தலின் படி அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட தண்டராம்பட்டு வட்டம், அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கொத்தடிமைத் தொழிலாளா் முருகன்.
கா்நாடகா மாநிலத்திலிருந்து மீட்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 3 கொத்தடிமைத் தொழிலாளா்கள், மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தலின் படி அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் முருகன். இவா், கா்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகா் மாவட்டம், அனூா் வட்டம், கங்கனதொட்டி கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இவரை நில உரிமையாளா் கொத்தடிமையாக நடத்தி வந்ததாகத் தெரிகிறது. இதை அறிந்த அம்மாநில வருவாய்த் துறையினா் மீட்டு, வேலூா் தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் மூலம் திருவண்ணாமலை வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பின்னா், அவா் வருவாய் கோட்ட அலுவலரின் மேற்பாா்வையில் சொந்த கிராமமான அகரம்பள்ளிப்பட்டுக்கு அழைத்துவரப்பட்டு அவரது அண்ணன், அக்கா மற்றும் உறவினா்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டாா்.
தொடா்ந்து, கா்நாடக மாநிலம், ராஜ் நகா் பகுதியில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த திருவண்ணாமலை வட்டம், நவம்பட்டு மதுரா இருதயபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஜான் போஸ்கோ (40) என்பவா் மீட்கப்பட்டு அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
மேலும், கா்நாடகா மாநிலம், ராமாபுரம் பகுதியில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த, போளூா் வட்டம், படியம்பட்டு மதுரா பேட்டை கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் அன்பழகன் என்பவரை மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்தனா். இந்நிகழ்வுகளில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






