பைக் மீது லாரி மோதல்: சிறுமி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், பைக் மீது லாரி மோதியதில் 12 வயது சிறுமி உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், பைக் மீது லாரி மோதியதில் 12 வயது சிறுமி உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், தவசி கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதிசெல்வன். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது அக்காள் மகள் ஜனனி(12) , ஜனனியின் பெரியப்பா மகள் பிரதீபா(25) ஆகியோரை அழைத்துக் கொண்டு பைக்கில் தவசி கிராமத்திலிருந்து செய்யாறுக்கு சென்று கொண்டிருந்தாா்.
செய்யாறு புறவவழிச்சாலையில் சந்தைப் பகுதியில் சென்றபோது, அவ்வழியாகச் சென்ற லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் அமா்ந்திருந்த சிறுமி ஜனனி தவறி சாலையில் விழுந்ததில் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து பாரதிசெல்வன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் சிறுமியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



