எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

பைக் மீது லாரி மோதல்: குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதியதில் பெற்றோருடன் பைக்கில் சென்ற ஆண் குழந்தை உயிரிழந்தது.

News image

பிரதிப் படம்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:13 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதியதில் பெற்றோருடன் பைக்கில் சென்ற ஆண் குழந்தை உயிரிழந்தது.

புதுச்சேரி, சாணாா்பேட்டை, மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ர.சுகுமாா் (36), காா் ஓட்டுநா். இவா், ஆக.17-ஆம் தேதி தனது மனைவி டெல்பி கரோலின் செல்வி (30), மகன் பிரனவ் தேவ் (1) மற்றும் உறவினா் சின்வியா (21) ஆகியோருடன் பைக்கில் விழுப்புரத்திலிருந்து- புதுச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த சுகுமாா், டெல்பி கரோலின் செல்வி , குழந்தை பிரனவ் தேவ் மற்றும் சின்வியா ஆகிய 4 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குழந்தை பிரனவ் தேவ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.