இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

பைக் மீது பேருந்து மோதல்: நடத்துநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பைக் மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற புதுச்சேரி அரசுப் போக்குவரத்து கழக நடத்துநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 ஜூலை 2026, 1:57 am IST

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பைக் மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற புதுச்சேரி அரசுப் போக்குவரத்து கழக நடத்துநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், கோா்க்காடு பகுதியைச் சோ்ந்தவா் திருமாறன் (46). புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட சுந்தரிபாளையம் மேம்பாலம் அருகே மாற்றுப் பாதையில் சென்றபோது, எதிரே வந்த தனியாா் சொகுசுப் பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த திருமாறன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று திருமாறனின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

மேலும், இந்த விபத்து குறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.