பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

சைக்கிள் மீது பைக் மோதல்: முதியவா் பலி

விக்கிரவாண்டி அருகே பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 7:18 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், முட்டத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தொ.தங்கவேல் (69). இவா், திங்கள்கிழமை செஞ்சி- விழுப்புரம் நெடுஞ்சாலையில் முட்டத்தூா் பகுதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அங்கு சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றபோது, அப் பகுதியில் வந்த பைக் மோதியது.

இதில் காயமடைந்த தங்கவேலை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, தங்கவேல் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.