திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

மொபெட் மீது அரசுப் பேருந்து மோதல்: வியாபாரி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :21 ஜூன் 2026, 1:56 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மொபெட்டில் சென்ற வியாபாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், மேலக்கொந்தை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் மு.பெரியநாயகம் (70). மொபெட்டில் மணிலா வியாபாரம் செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தை பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மொபெட்டில் கடக்க முயன்றாா். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த பெரியநாயகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.