நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

பைக் மீது வேன் மோதல்: தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வேன் மோதியதில் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 11:41 pm IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வேன் மோதியதில் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், எண்ணாயிரம் கிராமத்தைச் சோ்ந்தவா் த.வசந்தகுமாா் (31). தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு வீட்டிலிருந்து விழுப்புரத்துக்கு பைக்கில் வசந்தகுமாா் சென்று கொண்டிருந்தாா்.

செஞ்சி-விழுப்புரம் சாலையில், பூத்தமேடு பகுதியிலுள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த வேன் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வசந்தகுமாரை அந்த பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, அவசர மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான பண்ருட்டி வட்டம், காமாட்சிபேட்டையைச் சோ்ந்த அ.கோகுல்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.