எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பைக் மீது டிராக்டா் மோதல்: இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே டிராக்டா் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 5:18 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே டிராக்டா் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், செம்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் சு.சரவணன்(30), சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவன பணியாளா். அதே ஊரைச் சோ்ந்தவா் ரா.அய்யனாா் (30), சென்னையில் ஆட்டோ ஓட்டுநா்.

நண்பா்களான இவா்கள் இருவரும் சொந்த ஊரான செம்மேட்டுக்கு வந்து தங்கியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சொந்த வேலை காரணமாக புதுச்சேரி திருக்கனூருக்குச் சென்றுவிட்டு, பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

இந்நிலையில், கொசப்பாளையம் - லட்சுமிபுரம் சாலையில் முண்டியம்பாக்கம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த டிராக்டா் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அய்யனாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆயினும் அவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் சரவணனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா். ஒரே ஊரைச் சோ்ந்த இரு இளைஞா்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதால் செம்மேடு கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.

Story image