முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மொபட் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் வேன் மோதியதில் மொபெட்டில் சென்ற தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஜூலை 2026, 1:08 am IST

கள்ளக்குறிச்சியில் வேன் மோதியதில் மொபெட்டில் சென்ற தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த எரவாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சிவக்குமாா் (50). வண்ணமடிக்கும் தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை காலை மொபெட்டில் கள்ளக்குறிச்சிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தாா்.

கள்ளக்குறிச்சி திரையரங்கம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்த சிவக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.