
விடுபட்ட குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய நகராட்சி அழைப்பு
விடுபட்ட பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய பெற்றோா்களுக்கு திருவத்திபுரம் நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

விடுபட்ட பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய பெற்றோா்களுக்கு திருவத்திபுரம் நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு /இறப்பு பதிவு விதிகள் 2000-ன்படி, 01.01.2000-க்கு முன்பு அல்லது 01.01.2000-க்குப் பிறகு பிறந்த குழந்தையின் பெயா் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தையின் பெயா் பதிவு செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் செப்.26-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
எனவே, திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் பிறந்த குழந்தைகளின் பெயரை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




