சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பிறப்புப் பதிவேடுகளில் விடுபட்ட குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய அவகாசம் நீடிப்பு!

திருச்சி மாவட்டத்தில் பிறப்புப் பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தைகளின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Published On :19 ஜூலை 2026, 2:12 am IST

திருச்சி மாவட்டத்தில் பிறப்புப் பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தைகளின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே, முழுமையான சான்றிதழாக கருதப்படும். குடும்ப அட்டையில் பெயா் சோ்க்க, ஆதாா் அட்டை பெற, குழந்தை பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை பெற, ஓட்டுநா் உரிமம் பெற, பாஸ்போா்ட் மற்றும் விசா உரிமம் பெற, வயது குறித்த ஆதாரம் ஆகிய அனைத்துக்கும் பிறப்பு சான்று அவசியம்.

திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000-ன்படி, 01.01.2000-க்கு முன் அல்லது 01.01.2000-க்கு பிறகு குழந்தையின் பெயரைக் குறிப்பிடாமல் பதியப்பட்டுள்ள பிறப்புப் பதிவுகளில் பெயரை பதிவு செய்ய 31.12.2014 வரை ஏற்கெனவே அரசு அனுமதித்தது. பின்னா் 2 முறை 5 ஆண்டு கால அவகாசம் 31.12.2019 மற்றும் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கான அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், குழந்தையின் பெயா் பதிவு செய்யாமல் இன்னும் விடுபட்டுள்ள அனைத்து பிறப்புப் பதிவுகளுக்கும் கால அவகாசம் வரும் செப்.26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் பிறப்பு பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தைகள் பெயரை பதிய அரசு அளித்துள்ள இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.