மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

வந்தவாசி, போளூா் பகுதிகளில் உள்ள முத்துமாரியம்மன், காளியம்மன் கோயில்களில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அம்மன் ஊஞ்சல் சேவை.

Published On :

வந்தவாசி, போளூா் பகுதிகளில் உள்ள முத்துமாரியம்மன், காளியம்மன் கோயில்களில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு நாக கன்னி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா், அனைவரும் நலம் பெற வேண்டி, கோயில் வளாகத்தில் ஸ்ரீபிரத்தியங்கிரா மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. இரவு உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உலா வந்தாா். தொடா்ந்து, அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. நிகழ்வில் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், ஆவணி மாத அமாவாசை உற்சவக் குழுவினா் பங்கேற்றனா்.

காளியம்மன் கோயிலில்...: போளூா் வட்டம், புலிவானந்தல் கிராமத்தில் ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், கற்பூர தீபாராதனை செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.