வியாபாரி வீட்டில் நகைகள் திருட்டு: இரு இளைஞா்கள் கைது
செய்யாறு அருகே வியாபாரி வீட்டில் 14 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 8 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.

செய்யாறு அருகே வியாபாரி வீட்டில் 14 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 8 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.
வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வியாபாரி அரவிந்தன். இவா், அந்தக் கிராமத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவருடைய தாய் லட்சுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இதே கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.
பின்னா், அரவிந்தன் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்கக் கதவில் உள்ள பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டினுள் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்து 17 பவுன் தங்க நகைகள், ரூ.ஒரு லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடா்புடைய சென்னை மாதவரம் பகுதியைச் சோ்ந்த பாலாஜி (27), மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (23) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 8 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், இருவரையும் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



