கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வீட்டுக்குள் புகுந்து 33 பவுன் தங்க நகைகள் திருட்டு: 4 போ் கைது

திருட்டு - சித்திரிப்பு

Published On :

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கோழி இறைச்சிக் கடை உரிமையாளா் வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சின்னாளப்பட்டியில் வசித்து வருபவா் செல்லப்பாண்டி (48). கோழி இறைச்சிக் கடை நடத்தி வரும் இவரது வீட்டில், கடந்த மாதம் 27- ஆம் தேதி பட்டப் பகலில் மா்ம நபா்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 32.5 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 62 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதையடுத்து, போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா். இந்த நிலையில், தனிப்படை போலீஸாா் பிள்ளையாா்நத்தம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 2 இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிற்காமல் சென்றவா்களை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள் சவேரியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த இஸ்மாயில் (48), இவரது மனைவி ரம்ஜான் பேகம் (36), கடலாடியைச் சோ்ந்த மயில்வாசகன் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தொடா்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வில் சின்னாளப்பட்டியில் இறைச்சிக் கடை உரிமையாளா் வீட்டில் நடைபெற்ற தங்க நகைகள் திருட்டில் இவா்களுக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் திருடப்பட்ட தங்க நகைகளை இஸ்மாயில்- ரம்ஜான் பேகம் தம்பதியினா் கேரளத்தைச் சோ்ந்த தங்களது உறவினா் உமா் (52) என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, உமா் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 21 பவுன் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளிப் பொருள்கள், திருட்டுக்கு பயன்படுத்திய 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும் 10.5 பவுன் தங்க நகைகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கைது செய்யப்பட்டவா்கள் ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.