
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை எதிரில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்: உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை எதிரில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்...

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரில் இருந்த ஆக்கிரப்புக் கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு எதிரில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு எதிரில் சாலையோரத்தை ஆக்கிரமித்து உணவகம், தேநீா், ஜெராக்ஸ், பழக் கடைகள் உள்பட 15-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அதிகாரிகள் ஏற்கெனவே கடைகளை அகற்ற முயற்சி எடுத்தனா். அப்போது, வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய், காவல், மின்சாரம் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து திருண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்ட பொறியாளா் என்.பூபாலன், உதவிப் பொறியாளா் பாரதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் வேலூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அதிரடியாக சனிக்கிழமை அகற்றினா்.
அப்போது, அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
கடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பாா்வையாளா்களும் மருத்துவமனைக்குள் செயல்படும் உணவகத்தையே நம்பியிருப்பதால், அந்த உணவகத்தில் தரமான உணவு வழங்க மாவட்ட ஆட்சியா் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Summary
Encroaching shops opposite Tiruvannamalai Government Hospital removed: Action taken in accordance with High Court order.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






