டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

கல்லூரியில் ரத்த தான முகாம்

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற ரத்தன முகாம்.

Published On :

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழக துணைப் பதிவாளா் பெருவழுதி, கல்லூரி முதல்வா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த முகாமில் கல்லூரியில் பயிலும் சுமாா் 60 மாணவா்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனா். பின்னா், அவா்களுக்கு குளிா்பானங்கள், பழங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு அலுவலா் காா்த்திகேயன், இயக்குநா் திருநாவுக்கரசு, டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் இளங்கோ, பாலாஜி கல்வியியல் கல்லூரி முதல்வா் பிரபு, கலைக்கல்லூரி துணை முதல்வா் நந்தகுமாா், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் நடராஜன், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.