மொழியில் முதுகெலும்பு இலக்கணம்'
ஒரு மொழிக்கு இலக்கணம் என்பது முதுகெலும்பு போன்றது. அது இல்லாமல் மொழியை பயன்படுத்த முடியாது என டைனிக் ஜாக்ரன் தென்னக விற்பனை பிரிவு துணைத் தலைவர் என். சேகர் கூறினார்.


ஒரு மொழிக்கு இலக்கணம் என்பது முதுகெலும்பு போன்றது. அது இல்லாமல் மொழியை பயன்படுத்த முடியாது என டைனிக் ஜாக்ரன் தென்னக விற்பனை பிரிவு துணைத் தலைவர் என். சேகர் கூறினார்.
விஐடி பல்கலைக்கழகத்தில் இலக்கண பேரகராதி மற்றும் புதிய ஆயிரமாண்டில் கற்பவர்கள் என்ற தலைப்பில் 9-வது சர்வதேச இலக்கண மாநாடு இம்மாதம் 3ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதிவரை நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், சேகர் மேலும் பேசியது:
ஆங்கிலம் வெளிநாட்டு மொழி என்ற கருத்து நிலவுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் கால்வைத்த பிறகு ஆங்கில மொழி இங்கு வழக்கத்துக்கு வந்தது.
இன்று சீன நாட்டவர் கூட ஆங்கிலம் கற்கத் தொடங்கியுள்ளனர். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது.
இன்று மாணவர்களிடையே ஆங்கில மொழி மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு மொழிகள் பயிலுவதற்கு ஆர்வம் உண்டாகியுள்ளது. ஆங்கில மொழி கற்பிப்பவர்கள் சரியான இலக்கணத்துடன் கற்பிக்கவேண்டும் என்றார் அவர்.
விழாவில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி இயக்குநர் கே. சத்தியநாராயணன், மைசூரில் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகள் மையத்தின் பிரதிநிதி வி.இளங்கோவன், மாநாடு அமைப்பாளர் வி. அனிதாதேவி, ஒருங்கிணைப்பாளர் ஆர். நாகேஷ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...